ஐ.நா.வுக்கு தென்கொரியா அழைப்பு - Yarl Thinakkural

ஐ.நா.வுக்கு தென்கொரியா அழைப்பு


வடகொரியாவின் அணு ஆயுதத்தளம் மூடப்படுவதை நேரில் வந்து உறுதி செய்து கொள்ளுமாறு ஐ.நா.சபைக்கு தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐ.நா. சபை தீர்மானங்களை மீறி உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்த வடகொரியா, இப்போது அவற்றை விடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி முதல் அந்நாடு அணு ஆயுத திட்டங்களை செயற்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் வடகொரியாவின் புங்கியே-ரி அணு ஆயுத பரிசோதனை தளம் மூடப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய பங்காற்றி வரும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ கற்றரசுடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது அவர், வடகொரியாவின் அணு ஆயுதத்தளம் மூடப்படுவதை ஐ.நா. சபையின் சார்பில் நேரில் வந்து உறுதி செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இந்த தகவலை தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post