ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்தால் போர் மூளும் -அமெரிக்காவை எச்சரிக்கும் ஐ.நா.- - Yarl Thinakkural

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்தால் போர் மூளும் -அமெரிக்காவை எச்சரிக்கும் ஐ.நா.-


ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதை தடுப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டாமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குற்றரெஸ் வலியுறுத்தியுள்ளார். 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்கவில்லை என்றால் போர் மூளும் அபாயமுள்ளதாக பிபிசியிடம் குற்றரெஸ் தெரிவித்துள்ளார்.
தன் மீதான தடைகளை நீக்குவதற்கு பிரதிபலனாக அணுத் திட்டத்தை கைவிட 2015ஆம் ஆண்டு ஈரான் ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அணுஆயுத ஒப்பந்தத்தில் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க ட்ரம்புக்கு எதிர்வரும் மே 12ஆம் திகதி வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில் ஈரானுடனான இந்த உடன்படிக்கை ஒரு முக்கிய இராஜதந்திர வெற்றி என்று குறிப்பிட்ட குற்றரெஸ் இது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றார்.
இதற்கு நல்ல மாற்று இல்லாமல் இதனை அகற்றக் கூடாது என்று கூறிய அவர், அப்படி செய்தால் அபாயகரமான சூழலை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.
Previous Post Next Post