நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பா.ஜ.க. புகார் - Yarl Thinakkural

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பா.ஜ.க. புகார்


பிரதமர் மற்றும் கர்நாடக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா மீது அவதூறு பரப்பியதாக குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் மீது பா.ஜ.க., தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதியும், 15ஆம் திகதி வாக்கு எண்ணிக்கையும் இடம்பெறவுள்ளது.  இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் கர்நாடக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆகியோரைக் குறித்து அவதூறாக பேசி வருவதாக குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் மீது கர்நாடக மாநில பா.ஜ.க., கர்நாடக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது.

இந்த புகார் மனுவில், ஏப்ரல் 29ஆம் திகதி பெங்களுரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் மோடியை வணிக நிறுவனத்தின் விற்பனையாளர் மற்றும் நாட்டை கொள்ளையடித்த திருடன் என்று விமர்சனம் செய்துள்ளார். அதேபோன்று நடிகர் பிரகாஷ்ராஜ், மோடி மற்றும் எடியூரப்பா ஆகியோர் மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post