இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்தாண்டு அறிவிக்கப்படாது - Yarl Thinakkural

இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்தாண்டு அறிவிக்கப்படாது


இலக்கியத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் நோபல் பரிசு இந்த ஆண்டு வழங்கப்பட மாட்டாது என சுவீடன் அக்கடமி அறிவித்துள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசினை முடிவு செய்யும் சுவீடன் அக்கடமி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு விருதுக்கு எவரையும் தேர்வு செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
தனது உறுப்பினர் ஒருவரின் கணவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை அக்கடமி கையாண்ட விதம் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களும், அதன் தலைவரும் பதவி விலகினர்.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019ஆம் ஆண்டு பரிசுக்குரியவரோடு சேர்த்து அடுத்த ஆண்டே தேர்வு செய்யப்போவதாக அக்கடமி அறிவித்துள்ளது.Previous Post Next Post