தாய்வானை சுற்றிவளைத்த சீன போர் விமானங்கள் - Yarl Thinakkural

தாய்வானை சுற்றிவளைத்த சீன போர் விமானங்கள்


தாய்வான் நாட்டை சுற்றி வளைத்து சீன போர் விமானங்கள் திடீர் என போர் பயிற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தாய்வான் ஜனாதிபதியாக ட்சாய் ல்ங் 2016ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக சீனா உரிமை கொண்டாடி அங்கு இராணுவ தளபாடங்களை குவித்து வருகிறது. இதற்கு தாய்வான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் சீன இராணுவத்தின் எச்-6கே ரக குண்டு வீசும் விமானங்கள் மற்றும்  எஸ்யு-35 ரக போர் விமானங்கள் இன்று தாய்வான் நாட்டை சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன. இந்த ஒத்திகையால் தாய்வானில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
Previous Post Next Post