அழகி கொலையில் முன்னாள் மலேசிய பிரதமருக்கு தொடர்பு - Yarl Thinakkural

அழகி கொலையில் முன்னாள் மலேசிய பிரதமருக்கு தொடர்பு

ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கவுள்ள மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மங்கோலியா நாட்டு மொடல் அழகி கொலை வழக்கிலும் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜீப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும் 92வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார்.

மலேசியா நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மொடல் அழகி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை தொடர்புப்படுத்தி மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அல்டன்ட்டுயா ஷாரிபு என்ற பிரபல மொடல் அழகிக்கும், பிரதமரின் நண்பர் அப்துலுக்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மலேசியாவில் வைத்து மொடல் அழகி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2002ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு இரு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கிய பேரத்தில் நடைபெற்ற ஊழலில் பிரதமரின் நண்பருக்கும், அழகிக்கும் பங்கிருந்ததாகவும், இந்த விவகாரம் வெளியே கசியாமல் இருப்பதற்காக அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.

Previous Post Next Post