பி.பி.சி. ஊடகவியலாளர் சுட்டுக்கொலை - Yarl Thinakkural

பி.பி.சி. ஊடகவியலாளர் சுட்டுக்கொலை


பி.பி.சி.யின் ஆப்கான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
திங்கள்கிழமை காலை ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 8பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 25பேர் கொல்லப்பட்ட நிலையில், வேறொரு சம்பவத்தில் பி.பி.சி. செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பி.பி.சி. உலக சேவையின் இயக்குநர் ஜேமி அங்கஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆப்கானிஸ்தானில் இன்று காலை நடந்த தாக்குதலை தொடர்ந்து, பி.பி.சி. ஆப்கான் செய்தியாளர் அகமது ஷா இறந்ததை பிபிசி மிகுந்த வருத்தத்துடன் உறுதி செய்கிறது.

29வயதான அகமது ஷா, பிபிசி ஆப்கான் சேவையில் ஒரு வருடத்திற்கு மேலாகப் பணியாற்றினார். ஏற்கனவே தன்னை மிகவும் திறமையான பத்திரிகையாளராக நிறுவியிருந்த அவருக்கு, ஆப்கான் சேவையில் மிகுந்த மரியாதை இருந்தது. இது ஒரு பேரிழப்பு. அகமது ஷாவின் நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும், பி.பி.சி. ஆப்கான் சேவைக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த மிகக் கடினமான நேரத்தில் அவருடைய குடும்பத்தை ஆதரிப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என கூறியுள்ளார்.

Previous Post Next Post