அபிவிருத்தி உத்தியோகத்தரகள் நியமனம் - Yarl Thinakkural

அபிவிருத்தி உத்தியோகத்தரகள் நியமனம்


அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக தேர்வாகிய 23பேருக்கான நியமனக் கடிதங்களை  வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். நேற்று  காலை 8.30 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் உதவிச் செயலர் ஏ.எக்ஸ் செல்வநாயகம் பிரதிபிரதம செயலாளர் நிர்வாகம்  திருமதி எஸ்.மோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வடமாகாணத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தேர்வுகள் ஏற்கனவே நடைபெற்று 197பேர் தேர்வாகியிருந்தனர். அவர்களில் 166பேர் மட்டுமே பயிற்சிக்கான கடமைகளை பெற்றிருந்தனர். இந்நிலையில் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஆளுநரின் விசேட அனுமதியுடன் இந்த நியமனங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post