பிரபல இயக்குநர் காலமானார் - Yarl Thinakkural

பிரபல இயக்குநர் காலமானார்

பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன், (வயது-88) உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
1958ஆம் ஆண்டு 'முதலாளி' என்ற படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் முக்தா சீனிவாசன்.
அடுத்து சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை வைத்து பல  படங்களை எடுத்தார். ரஜினி நடித்த 'பொல்லாதவன்' படத்தை இயக்கியவரும் இவரே. ஜெயலலிதாவின் 100ஆவது படமான 'சூரியகாந்தி' படத்தையும் இவர் தான் இயக்கினார்.
65படங்களை இயக்கிய இவர் தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றார். இயக்குநர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி அரசியலிலும் தடம் பதித்துள்ளார்.
மூப்பானார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த போது, அக்கட்சியின் பொதுச்செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.  இதுவரை சுமார் 350சிறுகதைகள், மூன்று நாவல்களை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள் அனைத்தும் 16தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.

Previous Post Next Post