ஸ்ரீதர் தியேட்டருக்கு எதிராக வழக்கு - Yarl Thinakkural

ஸ்ரீதர் தியேட்டருக்கு எதிராக வழக்கு


யாழ்.நகரிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீறிதர் தியேட்டர் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவானது எதிர்வரும் ஜீன் மாதம் 6ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இம்மனுவில் இராட்ணசபாபதி ஸ்ரீறிதர் உள்ளிட்ட 6பேர் மனுதாரர்களாகவும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர் மனுதாரராகவும் குறிப்பிட்டு சட்டத்தரணி கேசவன்  சயந்தன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
1996ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி அனுமதி எதுவுமின்றி சட்டவிரோதமாக குடியேறிய முதலாவது எதிர்மனுதாரர், கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக  வாடகை எதையுமே வழங்காமல் ஆதனத்தையும் கட்டடத்தையும் வைத்துள்ளார்.
இதன் காரணமாக உரிமையாளர்களாகிய எமக்கு மாதம் ஒன்றுக்கு 75ஆயிரம் ரூபா வீதம் ஏற்பட்ட இழப்பும் அதன் வட்டியையும் இணைத்து இதுவரை காலத்துக்குமான இழப்பீடாக 100மில்லியன் ரூபாவையும் எதிர் மனுதாரர் வழங்க வேண்டும். அத்துடன் தற்போது இடம்பெறும் வழக்கு செலவுடன் கட்டடத்துடன் கூடிய ஆதனத்தின் உரித்தையும் பெற்றுத் தரவேண்டும் என இம் மனுவில் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்நிலையில் இந்த மனுவை வரும் ஜூன் 6ஆம் திகதி அழைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.இராமகமலன் அனுமதியளித்துள்ளார்.
Previous Post Next Post