காங்கேசன்துறை கடலில் மிதந்த கஞ்சா - Yarl Thinakkural

காங்கேசன்துறை கடலில் மிதந்த கஞ்சா


காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 49 கிலோ கிராம் கஞ்சா பொதிகளை மீட்டு நேற்று காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 80 இலட்சம் எனத் தெரியவருகிறது. நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கடற்படையினரின் டோறா படகு சுற்று ரோந்தில் ஈடுபட்டிருந்த போது காங்கேசன்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்த பொதியினை சோதனை மேற்கொண்ட போது கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் கூறினர். எனினும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

Previous Post Next Post