ஊடக சுதந்திரதினத்தில் ஊடகப்போராளிகளை நினைவுகூர: யாழ்.ஊடக அமையம் அழைப்பு! - Yarl Thinakkural

ஊடக சுதந்திரதினத்தில் ஊடகப்போராளிகளை நினைவுகூர: யாழ்.ஊடக அமையம் அழைப்பு!

ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறுவதற்கு யாழ்.ஊடக அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு யாழ்.பிரதான வீதியில், நீதிமன்ற கட்டத் தொகுதிக்கு முன்பாக அமைந்த ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி முன் நாளை மாலை 3 மணிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எங்களிற்காக எழுதிய அமரர் காமினி நவரட்ண (ஆசிரியர் சற்றர்டே ரிவூயூ),மற்றும்
ஏ.ஜே.கனகரத்தினா(ஊடகவியலாளர்,சற்றர்டே ரிவூயூ ,சிரேஸ்ட விரிவுரையாளர்) அவர்களது நினைவேந்தல் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் நினைவேந்தல் நிகழ்வு அன்று மாலை 4 மணியளவில் றக்கா வீதியில் அமைந்துள்ள ஆர்ட் கலரியில் நினைவுரைகள் நடைபெறவுள்ளது.

“காமினி நவரட்ண பற்றிய புரிதல்” என்னும் தலைப்பில் மூத்த எழுத்தாளர் ஜ.சாந்தன் உரையாற்றவுள்ளார்.

“காமினி நவரட்ணவின் காலம்” என்னும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன் உரையாற்றவுள்ளார்.

“ஏ.ஜே.கனகரத்தினா காலத்தால் நிலைத்தவர்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியரும் முன்னணி சமூக செயற்பாட்டாளருமான இ.சிவச்சந்திரன் உரையாற்றவுள்ளார்.

“ஏ.ஜே பற்றிய தெற்கின் அறிதல்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக மொழியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் விமல்சுவாமிநாதன் உரையாற்றவுள்ளார்.

இந் நிகழ்வில் சகல ஊடகவியலாளர்களையும், சமூக ஆர்வலர்களையும், கல்வியாளர்களையும், பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.

Previous Post Next Post