தென்கொரியா நேரத்தை பின்பற்ற வடகொரியா முடிவு - Yarl Thinakkural

தென்கொரியா நேரத்தை பின்பற்ற வடகொரியா முடிவுகொரிய நாடுகளிடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ள நிலையில் தென்கொரியாவின் நேரத்தை பின்பற்ற வடகொரியா முடிவெடுத்துள்ள நிலையில், அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முன்வந்தது.
இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் ஹிம் ஜோங் உன்னை சந்தித்து பேச்சு நடத்தினர். இதையடுத்து வடகொரியா ஜனாதிபதியும், தென்கொரிய ஜனாதிபதியும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தித்தனர். இதனால் 60ஆண்டுகள் இரு நாடுகளுக்கிடையே நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்த அறையில் இரண்டு கடிகாரம் இருந்துள்ளது. தென்கொரியா பின்பற்றும் நேரத்தை விட 30நிமிடம் குறைவான நேரத்தை  வடகொரியா பயன்படுத்தியது.
இதையடுத்து ஹிம் ஜோங் வடகொரியா நேரத்தை மீண்டும் அரை மணி நேரம் அதிகமாக்க போவதாக அறிவித்தார்.

Previous Post Next Post