சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் இடுபட யாழ்.மாநகர சபை தடை - Yarl Thinakkural

சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் இடுபட யாழ்.மாநகர சபை தடை

யாழ்.மாநகர சபையின் ஆழுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் நடைபெறும் சிவில் நடவடிக்கைகள் மற்றும் பொது நிகழ்வுகளில் இராணுவம் ஈடுபடுவதற்கு யாழ்.மாநகர சபையினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளரும், யாழ்.மாநகர சபையின் உறுப்பினருமான வி.மணிவண்ணனினால் சபையில் கொண்டுவரப்பட்ட சிவில் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடுவதை தடை செய்வது தொடர்பான தீர்மாணம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதை அடுத்தே மேற்படி தடை மாநகர சபை நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
நேற்று யாழ்.மாநகர சபையில் நடைபெற்ற விசேட அமர்வின் போது கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சபை உறுப்பினருமான வி.மணிவண்ணன்:- யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தினத்தில் இராணுவமும் இணைந்து மரங்களை நாட்டுவது என்பது எற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினை நாங்கள் இணைத்துக் கொள்ளக் கூடாது. 
இராணுவம் எங்கள் தாயக பூமியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக் கொண்டு, இராணுவத்தை சிவில் நிகழ்வுகளில் இணைத்துக் கொள்வதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அவ்வாறு இராணுவத்ததை இணைத்து கொண்டு நிகழ்வுகளையோ அல்லது செயற்பாடுகளையோ முன்னேடுப்போமாக இருந்தால் அது இராணுவம் வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை என்ற தோற்றப்பாட்டினையே வெளிப்படுத்தி நிற்கும். 
குறிப்பாக யாழ்.மாநகர சபையின் ஆழுகைக்கு உட்பட்ட விடயங்களில் அடியோடு இராணுவத்தின் தலையீட்டினை நிறுத்த வேண்டும் என்றார். 
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேயர் இமானுவேல் ஆனோல்ட்:- இராணுவத்தை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் நாங்களும் இருக்கின்றோம். 
ஆனால் சர்வதேச சுற்றுச் சூழல் தினமாக உள்ளதினால் வடமாகாண ஆளுநர் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். மாநகர சபை இராணுவத்தை அழைக்கவில்லை. இராணுவத்தை ஆளுநரே குறிப்பிட்ட சில தேவைகளுக்காக அழைத்திருந்தார். 
ஆனால் மாநகர சபையின் தேவைகளுக்கு எமது ஊழியர்களையோ நாங்கள் பயன்படுத்துகின்றோம். இராணுவத்தை பயன்படுத்தவில்லை என்றார். 
தொடர்ந்து கருத்து வெளியிட்ட மு.ரெமிடியஸ்:- இராணுவத்தை அளுநராக இருந்தாலும், வேறு எவர் கொண்டு வந்து பயன்படுத்தினாலும் அதனை நாங்கள் அனுமதிக்க கூடாது என்றார். 
தொடர்ந்து கருத்து வெளியிட்ட வி.மணிவன்னண்:- மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் ஆளுநர் சொல்கின்றார் அல்லது வேறு யாரும் செல்கின்றார்கள் என்பதற்காக இராணுவத்தை இணைக்க கூடாது. 
இதனை ஆளுநருக்கு மாநகர சபை ஊடாக தெரிவிப்போம். இன்று (நேற்று) ஒரு தீர்மானத்தை சபையில் நிறைவேற்ற வேண்டும். 
அதாவது வடமாகாண ஆளுநர் யாழ்.மாநகர சபையின் ஆழுகைக்கு உட்பட்ட பகுதியில் இராணுவத்தை கொண்டு வந்து சிவில் நடவடிக்கைகளில் பயன்படுத்தக் கூடாது என்ற தீர்மானம் எகமனதாக இந்த சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார். 
அதன்படி எகமனதாக மேயர் உட்பட அனைத்து உறுப்பினர்களின் பலத்த ஆதரவோது வி.மணிவண்ணனினால் கொண்டுவரப்பட்ட தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. 

Previous Post Next Post