முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி: நல்லூரில் ஆரம்பம் - Yarl Thinakkural

முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி: நல்லூரில் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் “தீபமேந்திய ஊர்தி பவனி” யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமியார் ஆலய முன்றலிலிருந்து இன்று காலை புறப்பட்டது.

வல்வெட்டித்துறையில் மண்ணிலிருந்து நேற்று மு.ப 10.30 மணிக்கு பவனியை ஆரம்பித்த ஊர்தி இன்று காலை 9 மணியளவில் நல்லூரை வந்தடைந்தது.

இளைஞர்களால் ஒழுகமைத்து நடத்தப்படும் தீப ஊர்திப் பவனி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைகிறது.

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு தாயக மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

Previous Post Next Post