முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு - Yarl Thinakkural

முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு

புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி க.ஜெயக்குமார் மீண்டும் விசாரணைக்காக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு தலைமையகமான கொழும்பு நான்காம் மாடிக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர் 2010ஆம் ஆண்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவராக தற்போது இந்த முன்னாள் போரளி உள்ளார்.  அத்துடன் அரசியலிலும் ஈடுபட்டுவரும் இவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post