சுண்டிகுளத்தில் கோர விபத்து; ஒருவர் பலி! - Yarl Thinakkural

சுண்டிகுளத்தில் கோர விபத்து; ஒருவர் பலி!

கிளிநொச்சி – ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்றும், டிப்பர் ரக வாகனமும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவருடைய சடலம் நீண்ட நேரத்திற்கு பின்னரே மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்துத் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post