மிதக்கும் அணுமின் நிலையம் பயணத்தை ஆரம்பித்தது - Yarl Thinakkural

மிதக்கும் அணுமின் நிலையம் பயணத்தை ஆரம்பித்தது

ரஷ்யாவின் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் எரிபொருளை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
கப்பலை போன்று தோற்றமளிக்கும் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யா உருவாக்கியது. இந்த மிதக்கும் அணுமின் நிலையம் கடந்த மாதம் செயற்பாட்டுக்கு வந்த நிலையில், நேற்று முர்மன்ஸ்க் நகரில் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
654 கோடி ரூபா செலவில் உருவாகியுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையம் 144 மீற்றர் நீளம், 30 மீற்றர் அகலம் கொண்டது.
பெவெக் என்ற நகருக்கு அடுத்தண்டு இறுதிக்குள் இந்த மிதக்கும் அணுமின் நிலையம் சென்றடையும். அங்குள்ள ஊர்களுக்கு இதன் மூலம் மின்சாரம் அளிக்கப்படவுள்ளது.
சர்வதேச விதிமுறைகளின் படி அணுமின் நிலையம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுனாமி போன்ற இயற்கை பேரிடரை இது தாங்கும் என கப்பலை தயாரித்த ரஷ்ய அரசு நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.
Previous Post Next Post