கன்னியாகுமரி கடலில் தீவிர கண்காணிப்பு - Yarl Thinakkural

கன்னியாகுமரி கடலில் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமை அதிகாரி தலைமையில் 3 அதி நவீன படகுகளில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு குழுவினர் சின்னமுட்டம் முதல் கூடங்குளம் வரையிலும், இன்னொரு குழுவினர் சின்னமுட்டம் முதல் மணக்குடி வரையிலும், மற்றொரு குழுவினர் சின்னமுட்டம் முதல் முட்டம் கடற்கரை வரையிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுதவிர குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடற்கரை கிராமங்களில் உள்ள 11சோதனை சாவடிகளிலும் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் உள்ளுர் பொலிஸாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Previous Post Next Post