வடகொரியா பயணமான தென்கொரிய ஊடகவியலாளர்கள் - Yarl Thinakkural

வடகொரியா பயணமான தென்கொரிய ஊடகவியலாளர்கள்


வடகொரியா தனது அணுசக்தி சோதனை தளத்தை இடித்து தகர்ப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக நான்கு தென்கொரிய செய்தியாளர்கள் அங்கு சாட்சிக்காக சென்றுள்ளனர்.

ஜூன் மாதம் ஹிம்- ட்ரம்ப் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதற்காக  வடகொரியா தனது அணுசக்தி சோதனை நிலையத்தை மூடிவிட்டு அணு ஆயுதங்களையும் ஏவுகணை சோதனைகளையும் நிறுத்தி வைக்கும் என்று உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் வடகொரியா ஆறு அணு ஆயுத சோதனைகளை நடத்தி இருந்த பங்கி-ரெய் சோதனை தளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் மே 23-25ஆம் திகதிக்கு இடையில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கும் விழாவில் கலந்து கொள்ளவதற்காக தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து செய்தியாளர்களை வடகொரியா அழைத்துள்ளது.

வெளிநாட்டு செய்தியாளர்கள் பயணம் செய்வதாக பெய்ஜிங்கில் இருந்து வொன்ஸான் வரை சார்டர் விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அணுசக்தி சோதனை தளத்திற்கு செல்வதற்காக ஒரு சிறப்பு ரயில் ஒன்று பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post