இஸ்லாமாபாத்தில் அதிநவீன சர்வதேச விமான நிலையம் - Yarl Thinakkural

இஸ்லாமாபாத்தில் அதிநவீன சர்வதேச விமான நிலையம்


பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அதி நவீன சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் ஷாஹித் காகான் அப்பாஸி இன்று திறந்து வைத்தார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசிர் பூட்டோ விமான நிலையத்தில் பயணிகளுக்கு வசதிகள் குறைவும், இட நெருக்கடியும் ஏற்பட்டதால் மிகப்பெரிய புதிய விமான நிலையம் ஒன்றை இஸ்லாமாபாத் நகரில் அமைக்க கடந்த 1980ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.
இந்த அதிநவீன சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்ப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. சடார் மற்றும் ராவால்பிண்டி ஆகிய இரு நகரங்களை இணைத்து இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.
இந்த விமான நிலையம் முதற்கட்டமாக ஆண்டுக்கு ஒன்றரை கோடி பயணிகள் உபயோக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post