வெனிசுவேலா தேர்தல்: ஜனாதிபதி மதுரோ மீண்டும் வெற்றி - Yarl Thinakkural

வெனிசுவேலா தேர்தல்: ஜனாதிபதி மதுரோ மீண்டும் வெற்றி


வெனிசுவேலாவில் நடந்து முடிந்த தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, மீண்டும் அந்நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாட்டின் நிலவி வரும் உணவு பற்றாக்குறைகளுக்கு இடையே நடந்த தேர்தலில் 46வீத வாக்குகளே பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றி பால்கோன் கூறினார்.

தேர்தல் சரியான முறையில் நடக்கவில்லை. எனவே வெனிசுவேலாவில் புதிய தேர்தல்களை நடத்த வேண்டும் என அவர் கூறினார். 90வீத வாக்குள் எண்ணப்பட்ட நிலையில் நிக்கோலஸ் மதுரோ 67.7வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும், பால்கோன் 21.2வீத வாக்குகள் பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்தல் ஆணைய தலைவர் அறிவித்துள்ளார்.

கராகஸில் உள்ள தனது ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே காத்திருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மதுரோ, அவர்கள் என்னை குறைத்து மதிப்பிட்டு விட்டனர் என்றார்.
Previous Post Next Post