சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும் -கொதிக்கும் கமல்- - Yarl Thinakkural

சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும் -கொதிக்கும் கமல்-

மக்களை தொடர்ந்து துன்புறுத்தினால் சரித்திரம் காணாத புரட்சி வெடிக்குமென நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் இரண்டு நாட்களாக ஏற்பட்ட கலவரம், போராட்டம், துப்பாக்கிச்சூட்டை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து ஆலோசனை செய்த உள்துறை அமைச்சகம் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலுள்ள இணைய சேவையை முற்றிலும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கமல்ஹாசன்,  தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா? அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கி வைப்பீர்களா? சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும். மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை. அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை என மிக காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
Previous Post Next Post