தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினி -கமல் சகோதரர் ஆரூடம்- - Yarl Thinakkural

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினி -கமல் சகோதரர் ஆரூடம்-


தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் நடிகர் ரஜினிகாந்த் என கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் சமூக வலைத்தளம் ஊடாக தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் கட்சி வளர்ச்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் பேஸ்புக்கில் பதிவில், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர். இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்று அழைக்கலாம். இந்தாண்டு உங்களை நான் புரிந்து கொள்வேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என தெரிவித்துள்ளார்.
சாருஹாசன் தனது பதிவில் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று ரஜினி காந்த்தை தான் குறிப்பிட்டுள்ளார். சாருஹாசனின் இந்த கருத்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post