ஊடகவியலாளர் சுட்டுக்கொலை - Yarl Thinakkural

ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

ரஷ்யாவை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் ஆர்கடி பாப்சென்கோ உக்ரைன் தலைநகர் கெய்வில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் உயிருக்கு பயந்து ரஷ்யாவிலிருந்து வெளியேறி உக்ரைன் நாட்டில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று இரவு தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது மனைவி பொலிஸாருக்கு தகவல் அளித்தார். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பத்திரிக்கையில் செய்தி வெளியிடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post