ஒன்றரை இலட்சம் பசுக்களை கொல்ல திட்டம் - Yarl Thinakkural

ஒன்றரை இலட்சம் பசுக்களை கொல்ல திட்டம்

நியூசிலாந்தில் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பக்றீரியா நோயை தடுக்கும் வகையில் ஒன்றரை இலட்சம் பசுக்களை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
உலகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த உற்பத்தில் 3சதவீதம் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. நியூசிலாந்தில் மொத்தம் சுமார் 66இலட்சம் பசு மாடுகள் உள்ளன.
இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பக்றீரியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.
இந்த பக்றீரியாவால் உணவு பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், நியூசிலாந்தின் முக்கிய தொழில் வளமான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் பண்ணைகளில் பக்றீரியா தொற்றுக்குள்ளான பசுக்களுடன், ஆரோக்கியமாக உள்ள பசுக்களையும் கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பக்றீரியா தாக்குதலுக்குள்ளான பசுக்களை கொன்று எரிக்கவும், பக்றீரியா தாக்காத பசுக்களை மரங்களுக்கு உரமாகவும், உணவுக்காக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 1,50,000 பசுக்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post