கிம்முடனான சந்திப்பை இரத்து செய்த ட்ரம்ப் - Yarl Thinakkural

கிம்முடனான சந்திப்பை இரத்து செய்த ட்ரம்ப்

வடகொரியா தனது அணு ஆயுத சோதனை இடங்களை அழித்த பின்னர் கிம் ஜோங் உன்னை, ட்ரம்ப் சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அச்சந்திப்பை இரத்து செய்வதாக ட்ரம்ப் கடிதம் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கிம்முக்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது:
உங்களுடைய சமீபத்திய அறிக்கை ஒன்று பெரியளவு பகைமையும் கோபாவேசமும் நிறைந்ததாக இருந்ததால், நீண்ட நாளைய திட்டமான நம் சந்திப்பை இப்போது நடத்துவது சரியாகாது என்று நான் கருதுகிறேன். இதற்காக வருந்துகிறேன். இது இழந்த வாய்ப்பு தான். ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கின்றேன்.

நமது பேச்சுவார்த்தைகளுக்கு தாங்கள் காட்டிய நேரம், பொறுமை, முயற்சி ஆகியவற்றை பாராட்டுகிறோம். நமது சந்திப்பு அவசியம் என்று கருதி உங்கள் மனநிலை மாறினால் என்னை அழைக்கவோ, எனக்கு எழுதவோ தயங்க வேண்டாம். இழந்த இந்த வாய்ப்பு உண்மையில் வரலாற்றின் ஒரு துயரமான கணம். என்று எழுதியுள்ளார்.

Previous Post Next Post