பேஸ்புக் மீதான விசாரணை தொடரும் - Yarl Thinakkural

பேஸ்புக் மீதான விசாரணை தொடரும்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், பேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிடிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனம் வணிக இழப்பு காரணமாக மூடப்பட்டது. அரசியல் கட்சிகள் சார்பில், இந்நிறுவனம் முறைகேடாக பயன்பாட்டாளர்களின் தகவல்களை பெற்றதாக கூறப்பட்டது.
பல்வேறு செயலிகளின் மூலம் 87மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனம் அண்மையில் ஒப்புக்கொண்டது. இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன ஊழியர்கள் நியாயமாகவும் சட்டபூர்வமாகவும் நடந்து கொண்டதாக நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் ஊடகங்கள் பல்வேறு தரப்பட்ட செய்திகளை வெளியிட்டதில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை இழந்து விட்டோம். இதன் விளைவாக எங்கள் தொழிலை தொடர்வது சாத்தியமற்றது என்று தீர்மானிக்கப்பட்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post