அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான் - Yarl Thinakkural

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்


ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டால் அமெரிக்கா இதுவரை இல்லாதளவுக்கு வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது: 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால், வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு அந்நாடு வருத்தப்பட வேண்டியிருக்கும்.
ஈரானுக்கு எதிராகப் பேசி வரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஈரான் மக்களிடையேயான ஒற்றுமையையும், உறுதியையும் அறிந்திருக்கவில்லை என்றார்.
இதற்கிடையே பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேரிஸ் ஜான்ஸன் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்லும் நிலையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடுவது குறித்து அவருடன் ஆலோசிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post