ஸ்ரீதேவியின் மகளை கவர்ந்த தனுஷ் - Yarl Thinakkural

ஸ்ரீதேவியின் மகளை கவர்ந்த தனுஷ்

ஹிந்தி திரையுலகில் ஸ்ரீதேவியைப் போலவே அவருடைய மகள் ஜான்வியும் கனவுக் கன்னியாக வருவாரா என பொலிவுட் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.

ஜான்வி நாயகியாக அறிமுகமாகவுள்ள தடக் ஜுலை 20ஆம் திகதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் தடக் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் கரண் ஜோஹர், ஜான்வியை பத்திரிகை ஒன்றிற்காக பேட்டி எடுத்துள்ளார். அந்த போட்டியில் தன் மனம் கவர்ந்த தென்னிந்திய நடிகர் தனுஷ் என பதிலளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஜான்வி.

ஹிந்தி அல்லது தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகைகளிடம் உங்கள் மனம் கவர்ந்த நடிகர் யார் என்று கேட்டால் தமிழை பொறுத்த வரையில் பொதுவாக ரஜினி, கமல், அஜித், விஜய் என்று தான் சொல்வார்கள். ஆனால்,ஜான்வி அவர்களை எல்லாம் விட்டு விட்டு தனுஷ் என சொல்லியிருப்பது வித்தியாசமான பதிலாக உள்ளது. தனுஷின் கதாபாத்திரங்களும், நடிப்பும் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்று சொல்லியிருக்கிறார் ஜான்வி.
Previous Post Next Post