சிவன்-பார்வதியாக மணமக்கள் சித்தரிப்பு - Yarl Thinakkural

சிவன்-பார்வதியாக மணமக்கள் சித்தரிப்பு

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாபின் திருமணத்துக்கு முதல் நாள் லாலுவின் வீடு அமைந்துள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மணமகன் தேஜ் பிரதாப் சிங்கை சிவனாகவும் மணமகள் ஐஸ்வர்யா ராயை பார்வதியாகவும் உருவகப்படுத்தி பதாகை அடிக்கப்பட்டுள்ளது. இதில் திருமண விழா காணும் எங்கள் அண்ணன் தேஜ் பிரதாப்புக்கும் அண்ணி ஐஸ்வர்யா ராய்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது சமூகவலைதளங்களில் மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். லாலுவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ஊழல் வழக்கில் சிக்கியவரின் குடும்பத்தினரை இப்படி கடவுளரைப் போல் சித்தரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

Previous Post Next Post