நடிகர் விஷாலை விரட்டும் தயாரிப்பாளர்கள் - Yarl Thinakkural

நடிகர் விஷாலை விரட்டும் தயாரிப்பாளர்கள்

நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கிறார். அவர் பொறுப்புக்கு வந்த பிறகு அவரும் சங்கத்தில் இருக்கும் ஏனைய நிர்வாகிகளும் பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
இது ஒரு சாரருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது தொடர்பாக டி.ராஜந்தர், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் பேசும்போது,
தேர்தலின் போது விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்துடன் அவர் டீல் பேசியிருக்கிறார். கொடுத்த வாக்குறுதியை மீறி தனது இரும்புத்திரை படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டுள்ளார்.
45நாட்களாக  தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம் நடந்தது. இதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. தனது படத்தை வெளியிடும் முயற்சியில் மட்டுமே இருந்திருக்கிறார். தில்லு முல்லு செய்யும் தயாரிப்பாளர்கள் இந்த சங்க அமைப்பு தேவையா. முறையற்ற நிர்வாகிகளை நீக்கிவிட்டு தேர்தல் அறிவித்து முறையான நிர்வாகிகளை நியமிக்க  வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பை மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
Previous Post Next Post