சிரியாவில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது உறுதியானது - Yarl Thinakkural

சிரியாவில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது உறுதியானதுகிளர்ச்சியளர்கள் பிடியிலிருந்த வட சிரியாவில் கடந்த பெப்ரவரி மாதம் நடந்த இரசாயன தாக்குதலில் குளோரின் பயன்படுத்தப்பட்டதற்கான வாய்ப்புள்ளதாக நேற்று உலக இரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பக அமைப்பு கூறியுள்ளது.

இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு, சாராகேபில் இயந்திர தாக்கத்தால் சிலிண்டரில் இருந்து குளோரின் வெளியேற்றப்பட்டது என்பதை கண்டுபிடித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டவில்லை.

முன்னதாக மருத்துவ குழுக்களும் செயற்பாட்டாளர்களும், அரசு ஹெலிகொப்டர் ஊடாக குளோரின் நிரப்பப்பட்ட குண்டுகள் வீசியதாக தெரிவித்தன. சிரிய அரசு திரும்ப திரும்ப இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தது.
எனினும் ஐ.நா. - இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு ஆகியவற்றின் கூட்டுப்பணி முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த டூமாவில் நடந்த ஒரு சந்தேக இரசாயன தாக்குதலில் பொதுமக்களில் 40பேர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அத்தாக்குதல் குறித்து இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு விசாரித்து வருகிறது.

உடலில் குளோரின் வெளிப்பாடு இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பதை அத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூலமாக கண்டறியப்பட்டது. விஷத்தன்மை வாய்ந்த இரசாயன ஆயுதங்களை தொடர்ச்சியாக யார் பயன்படுத்தினாலும் எதற்காக பயன்படுத்தியிருந்தாலும் நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post