தூத்துக்குடியில் புகுந்த விடுதலைப்புலிகள் - Yarl Thinakkural

தூத்துக்குடியில் புகுந்த விடுதலைப்புலிகள்தூத்துக்குடியில் வன்முறைக்கு விடுதலைப்புலிகளே காரணமென பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஸ்டர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 13பொதுமக்கள் பலியானதுடன், 75இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் சுப்பிரமணியன் தனது டுவிட்டரில்,  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்தது போலவே இப்போது நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் இருந்துள்ளது. அவர்களே வன்முறையை தூண்டியவர்கள். இதுவே பின்னர் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
மாநில அரசு போராட்டத்தில் வெளியாட்களின் ஊடுருவலே வன்முறைக்கு காரணம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் வன்முறையை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதிர்க்கட்சியினரும் சில சமூக விரோத சக்திகளும் அப்பாவி மக்களைத்  தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து கெட்ட பெயரை ஏற்படுத்த முயன்றதாக தெரிவித்துள்ளது.

Previous Post Next Post