பிரசார மேடையில் உயிரிழந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. - Yarl Thinakkural

பிரசார மேடையில் உயிரிழந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.


கர்நாடகாவில் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வரும் நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.வும், ஜெயநகர் தொகுதி வேட்பாளருமான விஜய் குமார் தேர்தல் பிரசாரத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்கட்சியான பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் பெங்களுர் ஜெயநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விஜய்குமாரும் (வயது-60) வழக்கம் போல் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் நேற்று மாலை பிரசாரம் செய்து வந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Previous Post Next Post