ஹவாயில் வெடித்து சிதறிய எரிமலை - Yarl Thinakkural

ஹவாயில் வெடித்து சிதறிய எரிமலை


ஹவாய் தீவில் குடியிருப்பு பகுதி அருகே உள்ள கீலவேயா மலையில் ஏற்பட்டுள்ள எரிமலை சீற்றம் காரணமாக உள்ளுரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,700 பேர் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.
ஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150அடி உயரத்துக்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறி வருகின்றது. சுமார் 183மீற்றர் தூரத்துக்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது.
மேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணமுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 1500இற்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற இராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஹவாயின் ஆளுநர் டேவிட் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post