'காலா' படத்துக்கு தடை விதிக்க மறுப்பு - Yarl Thinakkural

'காலா' படத்துக்கு தடை விதிக்க மறுப்பு


'காலா' திரைப்படத்தை கரிகாலன் என்ற அடைமொழியுடன் வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், 'காலா' திரைப்படத்தை கரிகாலன் என்ற அடைமொழியுடன் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தின் தலைப்பை பதிவு செய்து விட்டு அதனைப் புதுப்பிக்காமல் இருந்தால் அந்த தலைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காலா திரைப்படத்தை கரிகாலன் என்ற அடைமொழியுடன் வெளியிடத் தடை விதிக்க முடியாது. இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதிக்கு முன்பாக பட்டியலிட முடியாது. இந்த மனு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Previous Post Next Post