ராஜீவ் நினைவு தினம்: சோனியா, ராகுல், பிரியங்கா அஞ்சலி - Yarl Thinakkural

ராஜீவ் நினைவு தினம்: சோனியா, ராகுல், பிரியங்கா அஞ்சலிமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி தமிழகம் ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை தாக்குதல் மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு இன்றுடன் 27ஆண்டுகள் ஆகும். டில்லி வீர பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், அவரின் மனைவி சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள்  பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Previous Post Next Post