கல்வீச்சில் இளைஞன் பலி - Yarl Thinakkural

கல்வீச்சில் இளைஞன் பலி


காஷ்மீரில் நடந்த கல்வீச்சில் படுகாயமடைந்த சென்னை இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார்.
காஷ்மீரில் சில நாட்களுக்கு முன்னர் 5தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தவிர பொதுமக்களில் ஒருவர் இறந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாதிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஸ்ரீநகரின் புறநகர் நர்பால் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில், காஷ்மீருக்கு சுற்றுலா வந்த சென்னை இளைஞர் ஆர்.திருமணி (வயது-22) தலையில் படுகாயமடைந்தார்.
பாதுகாப்புப் படையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இத்தகவலை பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவரின் குடும்பத்தினரை, முதல்வர் மெஹபூபா முப்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

Previous Post Next Post