இந்து கடவுளை அவமதித்த பாரதிராஜா மீது வழக்கு - Yarl Thinakkural

இந்து கடவுளை அவமதித்த பாரதிராஜா மீது வழக்கு

இந்துமதக் கடவுளை அவதூறாக பேசியதாக இந்து மக்கள் முன்னணியை சேர்ந்த நாராயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது சென்னை வடபழனி பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடவுள்-2 என்ற படத்தை இயக்கவுள்ள பாரதிராஜா கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற அந்த படத்தின் தொடக்க விழாவில் பேசியபோது, விநாயகர் என்ற கடவுள் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என்று பேசியதாகவும் அவரது பேச்சு மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்துடன் அமைந்ததாக கூறி அவர் மீது வழக்கு பதியவேண்டும் என கோரி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
நாராயணனின் மனுவை ஏற்ற நீதிமன்றம், பாரதிராஜா மீது வழக்கு பதிய உத்தரவிட்டதன் பேரில் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பேசியதாக பாரதிராஜா மீது வடபழனி பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1997இல் வெளியான கடவுள் என்ற படத்தின் தொடர்ச்சியாக கடவுள்-2 திரைப்படம் எடுக்கப்படவுள்ளது. கடவுள் படத்தில் கதாநாயகன் கடவுள் மனிதனாக வாழ்ந்து, மனித வாழ்க்கையின் கஷ்டங்களை உணர்வதாக கதை அமைந்துள்ளது. கடவுள்-2 படமும் அதே பாணியிலே எடுக்கப்படவுள்ளது.

Previous Post Next Post