ஞானசார தேரர் குற்றவாளி: அறிவித்தது நீதிமன்றம்! - Yarl Thinakkural

ஞானசார தேரர் குற்றவாளி: அறிவித்தது நீதிமன்றம்!

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் வைத்து மிரட்டியதாக கூறும் சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, இன்று அவரது கைவிரல் ரேகை பெற்றுக் கொள்ளவும், எதிர்வரும் ஜூன் 14ம் திகதி அவரை அடையாளப்படுத்தல் மற்றும் தண்டனை வழங்கலுக்கு நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.
Previous Post Next Post