தங்கம் கடத்தியவர் கைது - Yarl Thinakkural

தங்கம் கடத்தியவர் கைது


புனே சர்வதேச விமான நிலையத்தில் 3கிலோ அளவிலான தங்கத்தை கடத்த முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மகராஷ்டிரா மாநிலம் புனே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் பாதுகாப்பு படையினர் நேற்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி அவரை சோதனையிட்டனர்.
அப்போது அவர் மறைத்து வைத்து சுமார் 3கிலோ அளவிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்திய நபரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். குறித்த நபரிடம் தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருகின்றது.

Previous Post Next Post