ஜே.வி.பியின் மே தின ஊர்வலத்தில்: த.தே.கூவின் சுமந்திரன்! - Yarl Thinakkural

ஜே.வி.பியின் மே தின ஊர்வலத்தில்: த.தே.கூவின் சுமந்திரன்!

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஏற்பாட்டில் யாழில் இன்று மாலை நடத்தப்பட்ட தொழிலாளர் தின பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டு ஆதரவு வளங்கியுள்ளார்.

இதில் ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்பட பொது அமைப்புக்கள் சிலவற்றின் பிரதிதிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் ஆரம்பமான பேரணி கோயில் வீதி - வைத்தியசாலை வீதி - சத்திரச் சந்தியை அடைந்து கே.கே.எஸ் வீதி ஊடாக யாழ்ப்பாண மாநகர சபை மைதானத்தை வந்தடைந்தது. அங்கு தொழிலாளர் தினக் கூட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.


Previous Post Next Post