வாகன உரிமையாளர்களுக்கு சிக்கில் - Yarl Thinakkural

வாகன உரிமையாளர்களுக்கு சிக்கில்தொடர்ச்சியாக 5வருடங்களுக்கு வருமான அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ளாத வாகனங்களின் பதிவுகள் இரத்து செய்யப்படுமென வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இத்திணைக்களம் இதுகுறித்த சுற்றுநிருபம் ஒன்றை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதில், 2017.12.31ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு வருடாந்த வருமான அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் பயன்படுத்தாத வாகனங்களாக கருதப்பட்டு அது தொடர்பான ஆவணங்களை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வடமாகாண சபையின் கீழ் 2017.12.31ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5வருட காலம் வாகன வருமானவரிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பான விபரங்களை அனுப்பி வைக்குமாறு வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது.

Previous Post Next Post