புலிகளின் எழுச்சிப் பாடலுடன்: கூட்டமைப்பின் மே தினம்! - Yarl Thinakkural

புலிகளின் எழுச்சிப் பாடலுடன்: கூட்டமைப்பின் மே தினம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி வடமராட்சி இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிக் பாடல்களுடன் ஒலிக்கவிடப்பட்டு பேரணி ஆரம்பமானது.

நெல்லியடி புதிய சந்தைப் பகுதியில் ஆரம்பமான பேரணி மைக்கல் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர், நகர மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பெரும் திரளானோர் பேரணியில் பங்கேற்றனர்.

தமிழரின் உரிமைகள், தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் வாகன ஊர்திகளும் பேரணியில் பங்கேற்றன.

தற்போது மைக்கல் விளையாட்டு மைதானத்தில் மே தினக் கூட்டம் இடம்பெறுகிறது.

Previous Post Next Post