இலங்கைக்கு இந்திய இராணுவ தளபதி திடீர் விஜயம் - Yarl Thinakkural

இலங்கைக்கு இந்திய இராணுவ தளபதி திடீர் விஜயம்

சீன இராணுவத்துக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்தியா இராணுவ தளபதி பிபின்ராவத் நாளை இலங்கை வரவுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அரசு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன இராணுவத்தின் கப்பல் படை பிரிவுக்கு 99ஆண்டு கால குத்தகைக்கு விட்டுள்ளது.
இது இந்திய பகுதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியா, இலங்கை அரசிடம் கவலை தெரிவித்தது. அதற்கு பதிலளித்த இலங்கை, இந்த துறைமுகம் இராணுவ தளமாக பயன்படுத்தப்பட மாட்டாது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடாது எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியா-இலங்கை இடையே பல்வேறு நிலைகளில் உறவுநிலை மேற்கொண்ட போதிலும் தற்போது சீனாவின் வருகையை அடுத்து இரு நாடுகளிடையே இராணுவ ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இந்திய இராணுவ தளபதி பிபின்ராவத் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சுற்றுப்பயணத்தின் போது அவர் இலங்கையின் இராணுவ தளபதிகளை சந்திக்கவுள்ளார். மேலும் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவ தளபதி தன்னுடைய சுற்றுப்பயணத்தின் போது கண்டி மற்றும் திருகோணமலையில் உள்ள இராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேசவுள்ளார். தொடர்ந்து தியாத்தாலாவவில் அமைந்துள்ள இராணுவ அக்கடமிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

Previous Post Next Post