கத்தோலிக்க பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டு விசாரணை - Yarl Thinakkural

கத்தோலிக்க பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டு விசாரணைஅவுஸ்ரேலியாவின் மிக மூத்த கத்தோலிக்க கார்டினலும் வத்திக்கான் கார்டினல் திருச்சபையின் பொருளாளருமான ஜோர்ஜ் பெல் மீது கடந்த வருடம் பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும் நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது, தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என பெல் என மறுப்பு தெரிவித்துள்ளார். தான் ஒரு அப்பாவி எனவும், தன் மீது அவதூறு சுமத்துவதற்காகவே இந்த குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் கடந்த சில காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக விக்டோரியா மாநில பொலிஸார் தெரிவித்திருந்தனர். கார்டினல் பெல் மீது பலர் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவர் மீது சுமத்தப்பட்ட சில குற்றங்கள் குறித்து விசாரிக்க போதுமான சாட்சியங்கள் இருப்பதாக அவுஸ்திரேலிய நீதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கார்டினல் பதவியிலிருக்கும் ஒருவர் மீது இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Previous Post Next Post