புடினை சந்தித்த பிரதமர் மோடி - Yarl Thinakkural

புடினை சந்தித்த பிரதமர் மோடி

இந்தியா-ரஷ்யா இடையேயான உறவைப் பிரிக்க முடியாது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் உள்ள கடற்கரை நகரான சோச்சியில் அந்நாட்டு ஜனாதிபதி புடினை பிரதமர் மோடி திங்கள்கிழமை சந்தித்தார்.
அப்போது ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் தாக்கம், சிரியா விவகாரம், மத்திய கிழக்குப் பிரச்சினை, கொரிய தீபகற்ப விவகாரம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும், இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு உறவு குறித்தும் தலைவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
ரஷ்யா-இந்தியா பாதுகாப்பு அமைச்சகங்கள் தங்களிடையேயான நெருங்கிய தொடர்பையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. இதுவே நமது நாடுகள் இடையே மிகப்பெரிய ராஜீய கூட்டுறவு நிலவுவதை தெரியப்படுத்தும் என்றார். ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.
Previous Post Next Post