“வட்ஸ் அப்” தலைமை நிர்வாகி பதவி விலகுகிறார் - Yarl Thinakkural

“வட்ஸ் அப்” தலைமை நிர்வாகி பதவி விலகுகிறார்


பேஸ்புக் விவகாரத்தில் தனது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என்பதால் வட்ஸ் அப்பின் தலைமை நிர்வாகியும், துணை நிறுவுநருமான ஜோன் கோம் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தாய் நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என வாஷிங்டன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் துணை நிறுவனமாக ‘வாட்ஸ் அப்’ உள்ளது. இது கடந்த 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதை கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.1இலட்சத்து 24ஆயிரம் கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post