வடகொரியா விரையும் ரஷ்ய அமைச்சர் - Yarl Thinakkural

வடகொரியா விரையும் ரஷ்ய அமைச்சர்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் அடுத்த மாதம் சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்புக்கு முன்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரிய செய்தியில் வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோவின் அழைப்பை ஏற்று பியாங்யங்குக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எனினும் அவர் செல்லும் திகதி தெரிவிக்கப்படவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் வியாழக்கிழமை வடகொரியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது.
Previous Post Next Post